தோத்த காண்டு மொத்தத்தையும் இறக்கிட்டாப்ல - கமல் பாட்டு குறித்து கஸ்தூரி விமர்சனம்
ADDED : 1391 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் விக்ரம். அனிருத் இசையில் இந்த படத்திலிருந்து கமல் எழுதி, பாடிய ‛பத்தல பத்தல' பாடல் வெளியாகி உள்ளது. 24 மணிநேரத்திற்குள் 1கோடி பார்வைகளை கடந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதேசமயம் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக அமைந்துள்ளன.
இதுபற்றி நடிகை கஸ்தூரி கூறுகையில், ‛‛சகலகலாவல்லவன் + மார்க்கண்டேயன் = கமல். வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் லிரிக்ஸில் இறக்கிட்டாப்ல. ஒன்றியம்கிற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு'' என விமர்சித்துள்ளார்.