அன்பால் வெல்கிறீர்கள் - உருகும் சினேகா
ADDED : 1241 days ago
அச்சுமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னர் காதலாகி கடந்த 2012ல் திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியர் நேற்று தங்களது 10வது திருமண நாளை கொண்டாடினர்.
பிரசன்னா உடன் இருக்கும் ரொமான்ஸ் போட்டோவை பதிவிட்டு சினேகா கூறுகையில், ‛‛எங்களின் 10 ஆண்டு பயணம் எளிதல்ல. நிறைய சண்டை, கருத்துவேறுபாடு இருந்தது. நான் கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றை மீறினேன். உங்கள்(பிரசன்னா) இதயத்தையும் சமயங்களில் உடைத்தேன். ஆனால் எப்போதும் என்னிடம் நீங்கள் அன்பு காட்டுகிறீர்கள். உங்கள் அன்பால் என்னை மீண்டும் மீண்டும் வெல்கிறீர்கள். அன்பை விட தூய்மையானது இந்த உலகில் இல்லை. லவ் யூ கண்ணம்மா'' என்கிறார்.