மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1211 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1211 days ago
பார்த்தாலே பரவசம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சமுத்திரகனி, அதன்பிறகு விஜயகாந்த் நடித்த நிறைஞ்ச மனசு படத்தை இயக்கினார். அதன்பிறகு 4 ஆண்டுகள் வரை எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருந்தார். சின்னத்திரை தொடரை இயக்கினார். சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் நடிகர் ஆனார். அதன்பிறகு நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களை இயக்கியபோதும் நடிகராக முன்னணிக்கு வந்தார். இப்போது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் குணசித்ர நடிகராகிவிட்டார்.
நாடோடிகள் படத்தை தெலுங்கில் சம்போ சிவ சம்போ என்ற பெயரில் இயக்கினார். ரவிதேஜா நடித்த இந்த படம் தமிழில் பெற்ற வெற்றியை பெறவில்லை. நிமிர்ந்து நில் படத்தை ஜான்டா பாய் கப்பிராஜு என்ற பெயரில் இயக்கினார். இரண்டு மொழிகளிலும் படம் வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில் 7 வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் படம் இயக்க இருக்கிறார். பவன் கல்யாண் ஹீரோவாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இது சமுத்திரகனி கடைசியாக இயக்கிய வினோதய சித்தம் படத்தின் ரீமேக் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் நல்ல செய்தியை விரைவில் எதிர்பார்க்கலாம். நானும் பவன் கல்யாணின் ரசிகர் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மனதில் வைத்து அவர் நடிக்கும் படத்தை இயக்குவேன் என்று கூறியிருக்கிறார் சமுத்திரகனி.
1211 days ago
1211 days ago