முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் பாவனா
ADDED : 1345 days ago
தமிழில் சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. அதைத்தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக நடித்து வந்தார். பின்னர் கன்னடத் திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன பின் தற்போது கன்னட படங்களில் அதிக முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார் பாவனா. அந்தவகையில் பாவனா நடிக்க உள்ள பிங்க் நோட் என்கிற புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
இந்த படத்தில் முதன்முறையாக பாவனா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதிலும் தடம் படத்தில் அருண்விஜய் நடித்தது போல ஐடென்டிகல் ட்வின்ஸ் கதாபாத்திரங்களில் பாவனா நடிக்கிறார் என்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயம். 2017ல் ஹாய் என்கிற படத்தை இயக்கிய ஜி.என் ருத்ரேஷ் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.