சீரியல் நடிகை தற்கொலை
ADDED : 1236 days ago
மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை பல்லவி டே. ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். ரேஷம் ஜான்பி , அமி சிராஜிர் பேகம், மன் மானே நா ஆகியவை அவர் நடித்த முக்கியமான தொடர்கள்.
25 வயதான பல்லவி, கோல்கட்டா நகரின் கர்பா பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் படப்பிடிப்புக்கு வராததால் படப்பிடிப்பு குழுவினர் அவரது வீட்டுக்கு சென்று தேடி உள்ளார். அப்போது அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பல்லவி தற்கொலை செய்யவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.