எளிமையாக நடந்த பிரணிதா சுபாஷ் வளைகாப்பு
ADDED : 1255 days ago
தமிழில் அருள்நிதி நடித்த உதயன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரணிதா சுபாஷ். அதன்பிறகு சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட சில தமிழ்ப்படங்களிலும் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். கடந்த வருடம் மே மாதம் திடீரென பெங்களூருவை சேர்ந்த நிதின் ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் பிரணிதா சுபாஷ்.
திருமணம் ஆகி ஒரு வருடம் நெருங்கிவிட்ட நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்தார் பிரணிதா. இந்த நிலையில் அவரது வளைகாப்பு விழா சமீபத்தில் மிக எளிமையாக நடைபெற்றுள்ளது. வளைகாப்பு புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் பிரணிதா.