நீலிமா ராணியின் க்யூட் பேமிலி
ADDED : 1237 days ago
சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்திலும் ஒரு கை பார்த்த அருமையான நடிகை நீலிமா ராணி. 90-களில் சீரியல் நடிகை ஒருவர் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தார் என்றால் அது நீலிமா ராணி தான். நீலிமா தன்னை விட 12 வயது மூத்தவரான இசை வானன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் திரையில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நீலிமா, சீரியல் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நிறுவி திறமையாக நிர்வாகம் செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நீலிமா தனது கணவர் மற்றும் இரு மகள்களுடன் இருக்கும் அழகிய தனது குடும்ப புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். க்யூட்டான அந்த குட்டி பேமிலிக்கு இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.