ஜூன் 23ல் மாமனிதன் ரிலீஸ்
ADDED : 1235 days ago
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து முதன்முறையாக இசையமைத்துள்ளனர். படம் ரெடியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. இருப்பினும் சில பிரச்னைகளால் பட ரிலீஸ் தாமதமானது. கடைசியாக மே 6ல் இந்த படம் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் போதிய தியேட்டர் கிடைக்காததால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜுன் 23-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.