விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ்
ADDED : 1256 days ago
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜயை இயக்கப் போகிறார் என்ற தகவல் சமீபத்தில் பரவி வந்தது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட லோகேஷ், விஜய் 67வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், படம் மாஸாகவும் கிளாஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்தைத் தயாரித்த லலித் குமார் தான் இந்தப் படத்தையும் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.