உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் புதிய சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்'

ஓடிடியில் புதிய சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்'

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து தெலுங்கில் தயாராகி ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.

இப்படம் ஒரு வாரத்திற்கு முன்பு ஓடிடி தளங்களில் வெளியானது. ஹிந்தி மொழிப் படம் நெட்பிளிக்ஸ் தளத்திலும், மற்ற மொழிப் படங்கள் ஜீ 5 தளத்திலும் வெளியானது. வெளியான ஒரு வாரத்திலேயே இந்தப் படம் ஓடிடி தளத்தில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஆங்கிலம் அல்லாத மொழிப் படங்களில் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிக மணி நேரம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. ஒரு வாரத்திலேயே இப்படம் 1 கோடியே 85 லட்சத்து 60 ஆயிரம் மணிநேரம் பார்க்கப்பட்டுள்ளதாம்.

தியேட்டர்களில் ஆர்ஆர்ஆர் படத்தை அதிக மக்கள் வந்து பார்த்தார்கள். அது போலவே ஓடிடி தளத்திலும் இப்படம் அதிக மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !