படமாகும் இளையராஜா கதை
ADDED : 1222 days ago
இசையமைப்பாளர் இளையராஜா இன்று (ஜுன் 2) 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாள் கொண்டாட்டத்தோடு, கோவையில் ‛ராஜா' என்னும் இசை நிகழ்ச்சியும் நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியை தினமலரும் இணைந்து நடத்துகிறது.
இந்த நிலையில், தனது பிறந்த நாளை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி, ‛ராஜா - தி மியூசிகல்' என்ற பெயரில் தனது இசைப்பயணம் குறித்த திரைப்படம் தயாராவது குறித்து அறிவிப்பை அவர் இன்று வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்தை 2024ல் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டுள்ளார். நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.