மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1215 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1215 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1215 days ago
நடிகை மற்றும் மாடாலான மீரா மிதுன் பிக்பாஸ் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த அவர் பல்வேறு சர்ச்சையான கருத்துகளை பேசி பலரிடமும் வெறுப்பை சம்பாதித்தார். இதன் காரணமாக இவர் மீது வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்குகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற விசாரணையையும் எதிர்க்கொண்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் தனக்கு சாவதை தவிர வேறு வழியில்லை என்று கூறி கதறி அழுதுள்ளார்.
அந்த வீடியோவில், 'என்னுடைய சாதனைகள் எதுவும் வெளியே தெரியவில்லை என்ற ஆதங்கத்தில் அப்படி பேசிவிட்டேன். இன்று, என் பெற்றோரும் என்னை சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். கடந்த 6 மாத காலமாக என் மீது தொடர் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. நீதிமன்றத்துக்கு வழக்குகள் தொடர்பாக அலைந்து திரிவதால் வருமானத்துக்கே வழியில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லை. இந்த சமூகம் என்னை வாழ முடியாமல் செய்கிறது. இனிமேலும் என்னை இந்த சமூகம் வாழ விடவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்' என்று அவர் அதில் பேசியுள்ளார். மீரா மிதுன் மனமுடைந்து கதறி அழும் இந்த வீடியோவை பார்த்து அவரை ட்ரோல் செய்த நெட்டிசன்கள் கூட பரிதாப்பட்டு வருகிறார்கள்.
1215 days ago
1215 days ago
1215 days ago