உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்து முறைப்படி நயன்தாரா உடன் திருமணம் - விக்னேஷ் சிவன் அறிவிப்பு

இந்து முறைப்படி நயன்தாரா உடன் திருமணம் - விக்னேஷ் சிவன் அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி எப்போது திருமணம் செய்வார்கள் என மில்லியன் டாலர் கேள்வியாய் இருந்தது. சமீபத்தில் அதற்கு விடை கிடைத்தது. ஒருவழியாக ஜூன் 9ல் திருமணம் செய்ய உள்ளனர். திருமணத்திற்கு முன்னதாக கோயில் கோயிலாக சென்று இருவரும் வழிபாடு நடத்தினர். இந்நிலையில் திருப்பதியில் நடைபெற இருந்த திருமணம் இப்போது சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் ரிசார்ட் ஒன்றில் பிரம்மாண்டமாய் இந்த திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் திருமணம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அவர் கூறுகையில், ‛‛வருகிற ஜூன் 9ல் எங்களது திருமணம் சென்னையில் நடைபெறுகிறது. இந்து முறைப்படி திருமணம் நடக்கிறது. திருப்பதியில் தான் செய்ய நினைத்தோம். ஆனால் நிறையபேரை அழைத்து சென்று அங்கு நடத்த முடியாத சூழலால் சென்னையில் நடத்துகிறோம். ஜூன் 11ல் தம்பதியராய் பத்திரிக்கையாளர்களாகிய உங்களை சந்திக்கிறோம்'' என்றார்.

நடிகை நயன்தாரா கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்றாலும் சில ஆண்டுகளுக்கு முன் இந்து மதத்தை பின்பற்ற துவங்கினார். தொடர்ந்து பல இந்து கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, கிட்டத்தட்ட இந்து பெண்ணாகவே வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !