கவனம் ஈர்த்த நயன்தாராவின் o2 பட டிரைலர்
ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் ஒரு சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ள படம் o2. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பேருந்தில் தனது மகனுடன் நயன்தாரா சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக பூமியில் வெடிப்பு ஏற்பட்டு அந்த பேருந்து மண்ணில் புதைந்து விடுகிறது. அதையடுத்து அந்த பேருந்தை கண்டுபிடிக்க மீட்புக்குழுவினர் நடவடிக்கை எடுக்கிறார்கள். மண்ணில் மூடியுள்ள பயணிகள் ஆக்ஸிஜன் இல்லாமல் தவிக்கிறார்கள்.
நயன்தாராவின் மகனுக்கு ஏற்கனவே மூச்சுவிடும் பிரச்சனை இருக்கிறது. ஆக்ஸிஜன் உதவியோடு தான் வாழ்கிறார். இப்படிப்பட்ட சூழலில் தனது மகனையும், அவரது ஆக்ஸிஜனை பறிமுதல் செய்ய நினைக்கும் சக பயணிகளையும் ஒரு தாயாக எப்படி காக்கிறார் என்பதே இந்த படத்தின் கதை என டிரைலரை பார்க்கும்போதே முறிந்து கொள்ள முடிகிறது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த o2 படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். நயன்தாராவின் மகனாக ரித்து ராக்ஸ் யு-டியூப் பிரபலம் சிறுவன் ரித்விக் நடித்துள்ளார். ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ள இந்த டிரைலர் ஓடிடியில் வெளியாக உள்ளது.