ரவீனா தாஹாவின் ரீசண்ட் கிளிக்ஸ்
ADDED : 1257 days ago
விஜய் டிவியின் மெளன ராகம் சீசன் 2-இல் ஹீரோயினாக நடித்து வருகிறார் ரவீனா தாஹா. மிகவும் இளம் வயதில் தமிழ் சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் ரவீனாவுக்கு இப்போதே ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்துவிட்டனர். அருமையாக நடனம் ஆடும் ரவீனா அடிக்கடி ரீல்ஸ் வீடியோவில் குத்தாட்டம் போட்டு அசத்தி வருகிறார். அதேசமயம் அம்மணி க்ளாமருக்கும் நோ சொல்வதில்லை. இந்த வயதில் இதெல்லாம் ஓவர் என்று ரசிகர்களே சொல்லுமளவுக்கு சமயங்களில் அழகை காட்டி போஸ் கொடுக்கும் ரவீனா, தற்போது லெஹங்கா உடையில் மணப்பெண் போல் போஸ் கொடுத்து சில கிளிக்குகளை வெளியிட்டுள்ளார். ரவீனாவின் அந்த இஞ்சி இடுப்பும் கள்ள சிரிப்பும் நெட்டிசன்களை திக்குமுக்காடச் செய்து வருகிறது.