மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1183 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1183 days ago
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 169 படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த தகவல்கள் மட்டும்தான் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள், முக்கிய கதாபாத்திரங்களில் யார் நடிக்கிறார்கள் என சில செய்திகள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் கதாநாயகியாக நடிப்பதாகவும், மேலும் ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள்மோகன் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் சிவராஜ்குமார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ரஜினியை சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவன் நான். அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய விருப்பம். அது அவரது 169 படத்தில் எனக்கு சாத்தியமாகி இருக்கிறது” என்று கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் துவங்க இருக்கிறது என்றும் செப்டம்பரில் பெங்களூரு மற்றும் மைசூர் ஆகிய பகுதிகளில் நடக்கும் படப்பிடிப்பில் சிவராஜ்குமார் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
1183 days ago
1183 days ago