மடிசாரு மாமியாக மாறிய மதுமிதா!
ADDED : 1218 days ago
'எதிர்நீச்சல்' தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் மதுமிதா. இந்த தொடர் ஒளிபரப்பாக ஆரம்பித்த சில நாட்களிலேயே ஏரளாமான தமிழ் ரசிகர்களின் மனதில் ஜனனியாக இடம் பிடித்துள்ளார். சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வரும் மதுமிதா சமூக வலைதளத்தில் தோழி வைஷ்னவியுடன் சேர்ந்து கொண்டு செய்யும் அலப்பறைகள் வாலிப பையன்களை கவர்ந்து கட்டிப்போட்டு வைத்துள்ளது. அந்த அளவிற்கு க்ளாமரில் டாப் கியர் போட்டு பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், முதல் முறையாக மடிசாரு புடவை கட்டியுள்ள மதுமிதாவின் புகைபடங்கள் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்கள் ஜீ தெலுங்கு மற்றும் ஜீ கன்னட தொலைக்காட்சியில் அவர் நடிக்கும் சீரியலின் கெட்டப் என்பது குறிப்பிடத்தக்கது.