தந்தையர் தினம் - ஐஸ்வர்யா ரஜினி நெகிழ்ச்சி
ADDED : 1212 days ago
3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியவர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா. இவர் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு பாடி பிட்னஸில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். ஜிம்மில் உடற்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டும் வீடியோக்களை வெளியிட்டிருந்தார். அதோடு மீண்டும் சினிமாவில் படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார் ஐஸ்வர்யா. அந்த வகையில் ஹிந்தியில் ஒரு படத்தை அவர் இயக்க தயாராகி வருகிறார். இந்த நிலையில் நேற்று தந்தையர் தினம் என்பதால் தனது தந்தை ரஜினிகாந்த் குறித்து அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், மை ஹார்ட் பீட். மகிழ்ச்சியான தந்தையர் தினம் என்று பதிவிட்டு தனது தந்தை ரஜினியுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.