இரண்டாவது முறை அப்பா ஆன நடிகர் நகுல்!
ADDED : 1209 days ago
நடிகர் நகுல் 2003-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு 2008-ம் ஆண்டு 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நகுல் கடந்த 2016-ம் ஆண்டு காதலித்து ஸ்ருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு அகிரா என்ற பெண் குழந்தை இருக்கிறார். தற்போது நகுலுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இரண்டு மடங்கு கொண்டாட்டம், இரண்டு மடங்கு மகிழ்ச்சி! அகிரா தன் சிறிய சகோதரனைப் பார்த்து பிரமிப்பில் இருக்கிறாள் என்று நகுலின் மனைவி ஸ்ருதி புகைப்படத்தை பதிவிட்டு கூறியுள்ளார் .