உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிஜூமேனனுக்கு வில்லனாக மாறிய குரு சோமசுந்தரம்

பிஜூமேனனுக்கு வில்லனாக மாறிய குரு சோமசுந்தரம்

தமிழில் ஜோக்கர் படத்தின் மூலம் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை மட்டுமல்லாது, மலையாள திரையுலகைச் சேர்ந்த படைப்பாளிகளின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்தவர் நடிகர் குரு சோமசுந்தரம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் சூப்பர்மேன் கதையம்சம் கொண்ட படமாக வெளியான மின்னல் முரளி படத்தில் குரு சோமசுந்தரம் வில்லனாக, அதேசமயம் அவரும் ஒரு சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடித்து மலையாள ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இதை தொடர்ந்து தமிழைவிட மலையாளத்தில் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பிஜூமேனன் கதையின் நாயகனாக நடிக்கும் நாலாம் முறா (நான்காவது முறை) என்கிற படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார் குரு சோமசுந்தரம். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. 2013-ல் ஜெயராம் நடித்த லக்கி ஸ்டார் என்கிற படத்தை இயக்கிய தீபு அந்திக்காடு என்பவர்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !