விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்துள்ள 19(1)(a)
ADDED : 1204 days ago
விஜய் சேதுபதி மலையாளத்தில் 19(1)(a) என்ற படத்தில் நடித்துள்ளார். நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்து வி.எஸ் என்ற பெண் இயக்குனர் இயக்கியுள்ளார். இவர் மலையாளத்தில் தேசிய விருது பெற்ற சலீம் அகமது என்பவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனின் பாதி முகங்கள் போஸ்டரில் இடம் பெற்றுள்ளன.