ஷாரூக்கான் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய்?
ADDED : 1254 days ago
தமிழில் “ராஜா ராணி” மற்றும் விஜய் நடித்த “தெறி, மெர்சல், பிகில்” ஆகிய படங்களை இயக்கிய அட்லீ தற்போது ஹிந்தியில் ஷாரூக்கான், நயன்தாரா நடிக்கும் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் அட்லீயின் மனம் கவர்ந்த நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவர் மட்டுமல்ல நடிகை தீபிகா படுகோனேவும் நடிக்கலாம் என்கிறார்கள். தெலுங்கு நடிகரான ராணா டகுபட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஹிந்தியில் தயாராகும் 'ஜவான்' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.