லிகர் பட புரமோஷனுக்கு தயாராகும் விஜய் தேவரகொண்டா
ADDED : 1206 days ago
தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் லிகர். மணிசர்மா இசையமைத்துள்ள இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தியில் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 25ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லிகர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை படக்குழு தொடங்கி இருக்கிறது. இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் மற்றும் புதிய போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், ஆந்திரா, தெலுங்கானா மட்டுமின்றி மும்பை உள்பட பல நகரங்களில் நடைபெறும் அனைத்து புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவதற்கு விஜய தேவரகொண்டாவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.