நடிகை கலெக்டராக உதவும் ஜெய்
ADDED : 1252 days ago
களவானி படத்தில் விமல் தங்கையாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி. தற்போதும் சினிமாவில் ஹீரோவின் தங்கை, ஹீரோயின் தோழி கேரக்டர்களில் நடித்து வருகிறார். இதுதவிர சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.
மனிஷா நடிப்போடு படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சட்டப்படிப்பு முடித்துள்ள அவர் அதில் முதல்வகுப்பில் தேறியுள்ளார். தனது தாயின் கனவை நிறைவேற்ற அவர் கலெக்டராக சிவிஸ் சர்வீஸ் தேர்வு பயிற்சியில் இருக்கிறார். இதற்கான பயிற்சி கட்டணம் கட்ட முடியாமலும், புத்தகங்கள் வாங்க முடியாமலும் தவித்து வந்தார்.
இதுகுறித்து கேள்விப்பட்ட நடிகர் ஜெய் மனிஷாவை அழைத்து அவரது ஆர்வத்தை பாராட்டி, அவருக்கான கல்வி செலவை ஏற்பதாக தெரிவித்தார். இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் மனீஷா.