யோகி பாபுவின் பன்னிகுட்டி ஜூலை 8ல் ரிலீஸ்
ADDED : 1197 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு. இடையில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். இவரும், கருணாகரனும் இணைந்து முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் பன்னிக்குட்டி. இவர்களுடன் சிங்கம்புலி, விஜய் டிவி ராமர் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கதிர் நடித்த ‛கிருமி' என்ற படத்தை இயக்கிய அணு சரண் இயக்கியுள்ளார். கே இசையமைத்திருக்கிறார். இந்த படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வந்த நிலையில் தற்போது வருகிற ஜூலை 8ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.