மாமன்னன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1299 days ago
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ் தற்போது மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு முடிவெடுத்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். அந்த புகைப்படங்களில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், மாரி செல்வராஜ் ஆகியோர் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி விடும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.