மேலும் செய்திகள்
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
1169 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
1169 days ago
புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச்
1169 days ago
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தமிழில் தாம் தூம், தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் பாணியிலான ஆக்ஷன் படம் தக்காட் பெரிய தோல்வியை சந்தித்தது. சுமார் 90 கோடியில் தயாரான படம் 3 கோடிதான் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து இழந்த மார்க்கெட்டை மீட்டெடுக்க நடிகை கங்கனா அடுத்தாக புதிய படம் ஒன்றை இயக்கி, நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை 'எமர்ஜென்சி' என்ற பெயரில் உருவாக்க கங்கனா திட்டமிட்டுள்ளாராம்.
இந்த நிலையில் கங்கனா ரனாவத் நடிக்கும் அடுத்த படத்தில் இணைந்து பணிபுரிய உள்ளதாக ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார். இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ், ‛நடிகை கங்கனாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரின் கனவு படத்தில் பணிபுரிய ஆவலாக இருக்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார். ஆனால், இருவரும் எமர்ஜென்சி படத்தில் இணைகிறார்களா அல்லது வேறு ஏதேனும் புதிய படத்தில் இணைய உள்ளனரா என்பது தெரியவில்லை. கங்கனாவின் 'தலைவி' படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1169 days ago
1169 days ago
1169 days ago