தன் செல்லக் குட்டியை விமானத்தில் அழைத்துச் சென்ற கீர்த்தி சுரேஷ்
ADDED : 1229 days ago
சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வீட்டில் நாய்களை வளர்த்து வருகிறார்கள். அவற்றுடனான தங்களது பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்களையும் பதிவிடுவார்கள்.
நடிகை கீர்த்தி சுரேஷ், 'நைக்' என்ற நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதனுடன் பல புகைப்படங்கள் வீடியோக்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளார். தன் செல்லக் குட்டியை முதல் முறையாக விமானப் பயணத்தில் அழைத்துச் சென்றது குறித்தும் ஒரு பதிவிட்டுள்ளார். விமானத்திற்கு வெளியே, உள்ளே என புகைப்படங்களையும், வீடியோ ஒன்றையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அது ஒரு தனி விமானப் பயணமாகத்தான் தெரிகிறது. அந்தப் பயணம் எப்படி இருந்தது என்பது குறித்து நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்ட சில பிரபலங்கள் கீர்த்தியிடம் கேட்டுள்ளனர்.