ஜூலை 8ல் ஓடிடியில் வெளியாகும் கமலின் விக்ரம்
ADDED : 1196 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள படம் விக்ரம். இந்த படம் இதுவரை 400 கோடிக்கு மேல் வசூலித்து கமல்ஹாசனுக்கு திரையுலகில் மீண்டும் ஒரு கம்பேக் படமாக அமைந்திருக்கிறது. இதையடுத்து பல படங்களில் நடிப்பதற்காக கதை கேட்டு வருகிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்தை வருகிற ஜூலை 8- தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்புகிறார்கள். இது குறித்த ஒரு புரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், நாயகன் மீண்டும் வரார் என்னும் பின்னணி இசை ஒலிக்க, நடந்து வரும் கமல்ஹாசன் துப்பாக்கி எடுத்து சுடுவது போன்ற மாஸான ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த புரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.