ஷங்கரின் படத்தில் நடனத்திற்கு 1000 பேர், சண்டைக்கு 1200 பேர்
ADDED : 1190 days ago
தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் இயக்குனர் ஷங்கர். தற்போது தெலுங்கில் ராம்சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. தற்போது இப்படத்திற்காக அம்ரிட்சரில் 1000 பேருடன் ராம்சரண், கியாரா நடனமாட ஒரு பாடல் காட்சி படமாகி வருகிறதாம். அடுத்ததாக ஒரு பிரம்மாண்ட சண்டைக் காட்சியைப் படமாக்க உள்ளார்களாம். 20 நாட்கள் வரை நடைபெற உள்ள அந்த படப்பிடிப்பில் 1200 ஸ்டன்ட் நடிகர்களை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.
இப்படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் பான் இந்தியா படமாக வெளியிட உள்ளார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகுதான் 'இந்தியன் 2' படத்தை இயக்க ஷங்கர் மீண்டும் வருவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.