உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி”
ADDED : 1187 days ago
முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், சாவி படங்களில் நடித்த பிரகாஷ் சந்திராவும், நடிகரும், இயக்குனருமான தருண் கோபியும் இணைந்து நடிக்கும் படம் “மூத்தகுடி”. விசாகப்பட்டினத்தை சேர்ந்த அன்விஷா இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ரவி பார்கவன் இயக்குகிறார். ஆர்.சுந்தர்ராஜன், ராஜ்கபூர், சிங்கம் புலி, யார் கண்ணன், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்க, நீண்ட நாட்களுக்கு பிறகு பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நடிக்கிறார். 1970களில் கோவில்பட்டி அருகில் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்குகிறார்கள். கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில், எட்டயபுரம், கயத்தாறு, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. புதியவர் சுரேஷ் முருகானந்தம் இசையமைக்கிறார்.