உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆண்ட்ரியாவுக்கு முதன்முறை

ஆண்ட்ரியாவுக்கு முதன்முறை

மிஷ்கின் இயக்கிய பிசாசு படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார் மிஷ்கின். முதன்மை வேடத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இந்த படத்தை தெலுங்கில் ‛பிசாச்சி 2' என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகின்றனர். இதற்காக ஆண்ட்ரியாவே தெலுங்கில் டப்பிங் பேசி உள்ளார். முதன்முறையாக ஆண்ட்ரியா தனது சொந்த குரலில் தெலுங்கில் டப்பிங் பேசி உள்ளார். டப்பிங்கின் போது அதற்காக தான் மேற்கொண்ட பயிற்சியை வீடியோவாக வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா. விரைவில் பிசாசு 2 படம் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !