பாகுபலி வெளியாகி ஏழு ஆண்டுகள்- தமன்னா நெகிழ்ச்சி பதிவு!
ADDED : 1185 days ago
தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் 5 படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. மேலும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பல நடிப்பில் 2015ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி வெளியான படம் பாகுபலி. இந்த படம் திரைக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படத்தில் அவந்திகா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் தமன்னா. இந்நிலையில் அதுகுறித்து தற்போது அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், பாகுபலி படத்தில் நடித்து ஏழு வருடங்களுக்கு பிறகும் ரசிகர்கள் என்னை அவந்திகா என்று அழைப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பது மிகப்பெரிய பெருமை என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார் தமன்னா.