கமலின் விக்ரம் படத்தை வெளியிட்ட நிறுவனமே தி லெஜண்ட் படத்தையும் வெளியிடுகிறது!
ADDED : 1281 days ago
ஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் லெஜென்ட் சரவணன், ஊர்வசி ரவுட்டாலா, பிரபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள படம் தி லெஜண்ட். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். விஞ்ஞானியாக சரவணன் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மிகப் பெரிய அளவில் வைரலானது. இந்த நிலையில் ஜூலை 28ம் தேதி திரைக்கு வரும் தி லெஜன்ட் படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் பெற்றுள்ள நிலையில், சர்வதேச அளவில் இப்படத்தை ஏபிஐ பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிறுவனம்தான் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தையும் உலக அளவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.