உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பிய ஐஸ்வர்யா ராய்

மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பிய ஐஸ்வர்யா ராய்


நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2010க்கு பிறகு படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டார். இந்த 15 வருடங்களில் ஐந்து படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கடைசியாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராய்.

அதனை தொடர்ந்து இந்த மூன்று வருடங்களாக படம் எதுவும் நடிக்காமல் இருந்த அவர் தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. அதே சமயம் இது சினிமா அல்ல, ஐஸ்வர்யா ராய் நடிக்கும் விளம்பர படத்திற்கான படப்பிடிப்பு தான் என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !