சந்தானத்தின் குலு குலு டீசர் வெளியானது
ADDED : 1183 days ago
ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம், அதுல்யா, நமீதா உள்பட பலர் நடித்துள்ள படம் குலு குலு. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். ஜூலை 29ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்சன் கலந்த காமெடி கதையில் இப்படம் உருவாகி இருக்கிறது. அதோடு இந்த படத்தில் தாடி வைத்த கெட்டப்பில் வித்தியாசமான காஸ்டியூம் அணிந்து நடித்துள்ளார் சந்தானம். இந்த டீசரில் பல வசனங்களை இடம் பெற்று இருந்தாலும், ‛‛சுத்தி கோமாளிகளை வச்சுக்கிட்டா முட்டாள் கூட அறிவாளியாகதான் தெரிவான்'' என்ற வசனம் ஹைலைட்டாக அமைந்திருக்கிறது.