சரத்குமாரின் 150வது பட பர்ஸ்ட் லுக் வெளியீடு
ADDED : 1179 days ago
நடிகர் சரத்குமார் இன்று(ஜூலை 14) தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து கூற, அவர் நடிக்கும் படங்களில் முதல் போஸ்டர்களையும் வெளியிட்டனர். சரத்குமார் நடிக்கும் 150வது படம் ‛தி ஸ்மைல் மேன்'. ஷஸ்யாம் பிரவின் இந்த படத்தை இயக்குகிறார். இன்வெஸ்டிகேஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்தபடம் தவிர்த்து சரத்குமார் அரை டஜன் படங்களில் நடிக்கிறார். அந்தவகையில் இவர் நடித்து வரும் ‛நிறங்கள் மூன்று, மழை பிடிக்காத மனிதன், ஆழி'' ஆகிய படங்களில் இருந்தும் இவரது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ளனர் சம்பந்தப்பட்ட படக்குழுவினர்.