‛ரெட் ஹாட்' குயினாக ரம்யா பாண்டியன்
ADDED : 1179 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் நடித்த ரம்யா பாண்டியன், தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர ஒரு மலையாள படமும் அவர் கைவசம் உள்ளது. தொடர்ந்து தனது கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிடுவதில் தீவிரம் காட்டி வரும் ரம்யா பாண்டியன், சில தினங்களுக்கு முன்பு மூன் லைட்டில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது சிகப்பு நிற உடை அணிந்து தான் எடுத்துக்கொண்ட கிளாமரான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் . அதன் பின்னணியில் ஒரு ஆங்கில பாடலும் ஒலிக்கிறது. இப்படி ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள அதிரடியான கவர்ச்சி வீடியோவுக்கு இளவட்ட ரசிகர்கள் லைக்ஸ் கமெண்ட்ஸ் என்று அமோகமான வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.