விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா
ADDED : 1141 days ago
பீஸ்ட் படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு என பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய் ராஜேந்திரன் என்ற ஆப் டெவலப்பர் வேடத்தில் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல் விஜய் நடித்த குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே. சூர்யாவும் இந்த படத்தில் தற்போது இணைந்திருக்கிறார். இதற்கு முன்பு விஜய் நடித்த நண்பன், மெர்சல் போன்ற படங்களில் எஸ்.ஜே. சூர்யா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .