மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
1144 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
1144 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
1144 days ago
வேகமாக வளர்ந்து வந்த சின்னத்திரை நடிகை சித்ரா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூந்தமல்லி அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பூந்தமல்லி கோர்ட்டில் இதன் வழக்கு நடந்து வருகிறது.
சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என சித்ராவின் பெற்றோரும், உறவினர்களும் குற்றம் சாட்டினர். இதையடுத்து ஹேம்நாத்தை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர், பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்துக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து வேண்டும் என ஹேம்நாத்தின் நண்பர் சையத் ரோஹித் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து சாட்சியம் அளித்ததால், தனக்கு ஹேம்நாத் கொலை மிரட்டல் விடுப்பதாக சையத் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
1144 days ago
1144 days ago
1144 days ago