லேடி பவுன்சராக நடிக்கும் தமன்னா
ADDED : 1232 days ago
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை தமன்னா. நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா, திரிஷா, ஹன்சிகா பாணியில் தமன்னாவும் தற்போது சோலோ ஹீரோயின் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். அப்படியான ஒரு படம் பப்ளிக் பவுன்சர். கரீனா கபூர் நடித்த ஹீரோயின் படத்தை இயக்கிய மதூர் பண்டார்கர் இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமன்னா லேடி பவுன்சராக நடித்திருக்கிறார். ஒரு கோடீஸ்வரரின் லேடி மெய்காப்பாளராக (பவுன்சர்) நியமிக்கப்படும் ஒரு பெண்ணின் கதை. காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. செப்டம்பர் 23ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.