திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு
நடிகர் விஜயின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்த போது, ஒரு நடிகையுடன் அவர் உறவு வைத்திருப்பதாகவும், தேவைப்பட்டால் அவரது பெயரை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார். அப்படி அவர் மனு தாக்கல் செய்த சில தினங்களில் சென்னையில் நடைபெற்ற கல்பாத்தி அகோரம் குடும்ப திருமண நிகழ்ச்சியில் விஜயும், திரிஷாவும் ஒரே காரில் சென்று கலந்து கொண்டார்கள். இது சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. திரிஷாவுக்கு எதிராக பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது.
இந்நிலையில் விஜய், திரிஷா குறித்து மீடியாக்கள் நடிகை குஷ்புவிடம் கேட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், நான் சந்தித்த பெண்களிலேயே மிகவும் கண்ணியமானவர்களில் ஒருவர் திரிஷா. மிகவும் மென்மையான ஆன்மா கொண்டவர் என்று கூறியுள்ளார். அதோடு, இது போன்ற விஷயங்கள் மிகவும் தனிப்பட்டவை என்றும், அவை மதிக்கப்பட வேண்டும் என்றும் குஷ்பூ வலியுறுத்தி இருக்கிறார்.
மேலும், தனிப்பட்ட விஷயங்கள் தொடர்பாக பெண் பிரபலங்கள் கேலி செய்யப்படுவது குறித்து பேசிய குஷ்பு, பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவிப்பவர்கள் பெரும்பாலும் வக்கர இன்பத்திற்காக அவ்வாறு செய்கிறார்கள். அவர்களை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளார். அப்படிப்பட்ட கருத்து தெரிவிப்பவர்களில் 99.90 சதவீதம் பேர் முன்பின் தெரியாதவர்கள்தான். அவர்களுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் கூறியுள்ளார் குஷ்பு.