உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'?

100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'?


ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி திரைக்கு வந்த படம் 'தாய் கிழவி'. சிவகுமார் முருகேசன் இயக்கிய இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. ராதிகாவுடன் சிங்கம் புலி, அருள்தாஸ், முனீஸ்காந்த், பால சரவணன், இளவரசு வெளியிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் திரைக்கு வந்த முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று நல்ல வசூலை குவித்து வந்தது.

இந்த நிலையில் இப்படம் திரைக்கு வந்து 17 நாட்களில் இதுவரை 70 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு தொடர்ந்து தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுத்த வண்ணம் இருப்பதால் இந்த படம் கண்டிப்பாக 100 கோடி என்ற இலக்கை எட்டி விடும் என்றும் படக் குழுவில் கூறுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !