மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!
ADDED : 3 minutes ago
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் தற்போது அப்படத்தின் மூன்றாம் பாகத்தையும் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் இரண்டாம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள்.
ஆனால் தற்போது கேரளாவில் ஏப்ரல் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டால் வியாபாரம் பாதிக்கும் என்று ரிலீஸ் தேதி மாற்றப்படுவதாக படக்குழு அறிவித்திருக்கிறது. புதிய வெளியீட்டு தேதியை ஆலோசித்து வருவதாகவும், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.