உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா?

மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா?

தனது முதல் படமான பல்லவி அனுபல்லவி படத்தில் தொடங்கி மவுனராகம், நாயகன், அஞ்சலி உள்ளிட்ட படங்களில் இளையராஜாவுடன் கூட்டணி வைத்தார் மணிரத்னம். 1992ம் ஆண்டு ரோஜா படம் தொடங்கி பாம்பாய், உயிரே, அலைபாயுதே, குரு, பொன்னியின் செல்வன், தக் லைப் வரை கிட்டத்தட்ட 20 படங்களில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து வேலை செய்தார்.

இப்போது விஜய்சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைக்க உள்ளதாக தகவல். இதன்மூலம் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மானின் 34 ஆண்டு கூட்டணி முடிவுக்கு வருவதாக தகவல். டியூட், பல்டி படங்களுக்கு இசையமைத்த சாய் அபயங்கர் இப்போது கருப்பு, மார்ஷல், சிம்பு, தனுஷ், அட்லி இயக்கும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !