தம்பி படத்தை வெளியிடும் அண்ணன்
ADDED : 1520 days ago
தேஜாவு படத்திற்கு பிறகு வெளிவரும் அருள்நிதியின் படம் டைரி. இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ள இந்த படத்தில் அருள்நிதியுடன் பவித்ரா மாரிமுத்து, கிஷோர், ஜெயபிரகாஷ், தணிகை, நக்கலஸ்ட் தனம், ஷாரா உள்பட பலர் நடித்துள்ளனர். அரவிந்த் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ரான் எதன் யோகன் இசை அமைத்துள்ளார்.
இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம். இதில் அருள்நிதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் வெளியிடுகிறார். சினிமாவில் உதயநிதியும், அருள்நிதியும் நடிகராக, தயாரிப்பாளராக பயணித்து வருகிறார்கள். முதல்முறையாக இருவரும் இணைவது இந்தப் படத்தில் தான்.