தமிழ் படத்தில் ஹீரோயின் ஆகும் பாலிவுட் கவர்ச்சி நடிகை
ADDED : 1179 days ago
பாலிவுட் கவர்ச்சி நடிகை ஜெரின் கான். வீர் என்ற படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு ஹேட் ஸ்டோரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தமிழில் நான் ராஜாவாக போகிறேன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.
இப்போது நாக பைரவா என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் வி.பழனிவேல் தயாரிக்கிறார். தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார் பேட்டை, கொம்பு படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்கி நடிக்கிறார். இதில் ஜெரின் கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.