பிரபுதேவாவுடன் இணைந்த சுசித்ரா
ADDED : 1170 days ago
கன்னடத்தில் ஒளிபரப்பான மாங்கல்யா தொடரின் மூலம் புகழ் பெற்றவர் சுசித்ரா. அங்கு சில படங்களிலும் நடித்துள்ளார். நாணல் தொடர் மூலம் தமிழுக்கு வந்த அவர் தற்போது பாக்யலட்சுமி தொடரில் டைட்டில் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில், சுசித்ரா தற்போது தமிழ் சினிமாவிலும் நுழைகிறார். கன்னடம் மற்றும் தமிழில் தயாராகும் புதிய படம் ஒன்றில் பிரபுதேவா உடன் இணைந்து நடிக்கிறார். இதில் அவர் பிரபுதேவாவிற்கு அம்மாவாக நடிக்கிறார். பாக்யலட்சுமி தொடரில் அம்மாவாக நடிக்கும் பாக்யலட்சுமி சினிமாவிலும் அம்மா ஆகியிருக்கிறார்.