மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1135 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1135 days ago
சென்னை : இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச சதுரங்கப் போட்டியான 44வது செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடக்கிறது. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை முதல் ஆக., 9 வரை போட்டிகள் நடக்க உள்ளன. ஆக., 10ம் தேதி நிறைவு விழா நடக்கிறது. நிகழ்ச்சிக்கான துவக்க விழா இன்று(ஜூலை 28) மாலை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். திரையுலகினர் சிலருக்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛நான் மிகவும் விரும்பும் ஒரு உள்ளரங்க விளையாட்டு. அனைத்து செஸ் வீரர்களுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்'' எனக் கூறி, செஸ் விளையாடும் படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ரஜினி.
1135 days ago
1135 days ago