மேலும் செய்திகள்
நடிகர் ஜெய்சங்கர் பெயரிலான சாலை திறப்பு
1153 days ago
பாரம்பரியமிக்க ஏவிஎம் தியேட்டர் இடிப்பு
1153 days ago
கரண் ஜோகர் வழங்கி வரும் காபி வித் கரண் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது எபிசோடில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் , சமந்தா கலந்து கொண்டார்கள். அப்போது சமந்தா பேசும்போது நயன்தாரா பற்றி குறிப்பிட்டார். இதற்கு கரண் ஜோகர் நயன்தாராவின் பெயர் என்னுடைய லிஸ்டில் இல்லையே, சமந்தா என்று தானே உள்ளது என்றார் . இப்படி அவர் சொன்னது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதமானது. நயன்தாராவின் ரசிகர்கள் கரண் ஜோகருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கரண் ஜோகர். அவர் கூறுகையில், ஆர்மேக்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து தனக்கு கிடைத்த பட்டியலில் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகை என்பதில் சமந்தாவின் பெயர் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை வைத்துதான் நான் அப்படி கூறினேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல என்று ஒரு விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
1153 days ago
1153 days ago